கோழிகளுக்கு தடுப்பூசி முகாம்

ஈரோடு, ஜன.27 கோழிக்களுக்கான வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் 2 வாரங்களுக்கு நடைபெற உள்ளது. சிறிய குஞ்சுகள் முதல் பெரியகோழிகள் வரை அனைத்து கோழி இனங்களையும் பாதிக்கும் முக்கியமான நச்சுயிர் தொற்று நோயான வெள்ளைக்கழிச்சல் எனப்படும் ராணிக்கட் நோய் வெயில் காலங்களில் அதிக அளவில் பரவி கோழிகளில் இறப்பு ஏற்படுத்தக்கூடியதாகும். இந்நோய் தாக்கிய கோழிகள் வெள்ளையாக கழியும், குறுகிக்கொண்டு தீவனம் மற்றும் தண்ணீர் குடிக்காமல் இருக்கும், நரம்பு பாதிக்கப்பட்ட கோழிகள் கால்களை இழுத்து கொண்டும், கழுத்தை திருகி கொண்டும் இருக்கும். இந்நோய் பரவியபின் சிகிச்சை அளித்து குணப்படுத்துவது கடினம்.

எனவே, கால்நடைத்துறை சார்பில் ஆண்டுதோறும் கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி முகாமானது வரும் பிப்.1ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை 2 வாரங்களுக்கு நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கோழிகளை வளா்க்கும் அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் இத்தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: