×

21 பேருக்கு கொரோனா

ஈரோடு, ஜன.27: ஈரோட்டில் நேற்று புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,266 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் நேற்று 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து இதுவரை மொத்தம் 13,952 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மருத்துவமனைகளில் 166 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொரோனா தொற்றினால் மாவட்டத்தில் நேற்று வரை 148 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Corona ,
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 2,506,504 பேர் பலி