பூந்தமல்லிக்கு வரும் 31ம் தேதி ஸ்டாலின் வருகை

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில்  வரும் 31ம் தேதி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற நிகழ்ச்சி நடக்கிறது. இதை முன்னிட்டு  பூந்தமல்லி நகர திமுக ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் பூவை எம்.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  இதில் மாவட்ட நிர்வாகிகள் கே.ஜெ.ரமேஷ், காயத்ரி தரன், சங்கீதா சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள்  பூவை  எம்.ஜெயக்குமார், புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன் தங்கம் முரளி, நிர்வாகிகள் சு.அன்பழகன், பிஆர்பி.அப்பர் ஸ்டாலின், பழனி, டில்லி ராணி மலர்மன்னன், பொருளாளர் பி.சௌந்தரராஜன், ஜெ.சுதாகர், ஆர்.புண்ணியகோட்டி, க.ஏழுமலை, எஸ்.அசோக்குமார், ஜெ.அமிதாப், ஜெ.நிர்மல், எஸ்.சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வருகின்ற 31ம் தேதி பூந்தமல்லி தொகுதிக்கு வருகைதரும் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நகர திமுக சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிப்பது என்றும், வழிநெடுகிலும் கொடி தோரணங்கள் அமைப்பது என்றும், ஆயிரக்கணக்கானோர் திரண்டு சென்று கலந்து கொள்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>