×

அரசு ஊழியர் வீட்டில் 45 சவரன் திருட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த சாந்திநகர் பகுதியில் வசித்துவருபவர் மோகன். ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி நிர்மலா.நேற்று முன்தினம் இவர்கள் அச்சிறுப்பாக்கத்தில் உள்ள ஆச்சிஸ்வரர் கோயிலுக்கு சென்றனர். நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தனர்.  அப்போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டு இருந்த துணிமனிகள், ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும்,  பீரோவின் லாக்கரில் வைக்கப்பட்டருந்த 45 சவரன், ₹ 80ஆயிரம் ஒரு கிலோ வெள்ளி ஆகியவை காணாமல் போனது தெரிய வந்தது. 

Tags : home ,government employee ,
× RELATED அரசு ஊழியர் வீட்டில் 45 சவரன் திருட்டு