×

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் இருசக்கர வாகனப் பேரணி

காஞ்சிபுரம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்களை கண்டித்தும், சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் பல மாநில விவசாயிகள் குடியரசு தினமான நேற்று பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தி னர். இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் முழுவதும்  தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் விவசாய சங்கங்கள், கட்சி சார்ந்த விவசாய சங்கங்கள் இணைந்த விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில்  மாவட்டங்களில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள்  200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி இருசக்கர வாகன பேரணியாக சென்றனர்.

தடையை மீறி நடைபெற்ற விவசாயிகளின் இருசக்கர பேரணியை ரங்கசாமி குளம் அருகே போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேரணியாக வந்த விவசாயிகளும், விவசாய சங்க நிர்வாகிகளும் சாலையில் நின்று மத்திய மாநில அரசுகளை வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.இதைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்

Tags : rally ,Union ,Delhi ,
× RELATED மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி