×

பேஸ்புக் மூலம் நட்பாக பழகி நூதன முறையில் வழிப்பறி: 4 பேர் கைது

திருவொற்றியூர்: மாதவரத்தை சேர்ந்தவர் ஐயப்பன்(34). தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு பேஸ்புக் மூலம் கொடுங்கையூரை சேர்ந்த மோனிஷ் அறிமுகமாகியுள்ளார். பின்னர் பேஸ்புக் மூலம் ஒருவருக்கு ஒருவர் கருத்து பரிமாற்றம் செய்துகொண்டனர். இந்நிலையில், ஐயப்பனை நேரில் பார்க்க வேண்டும் என மோனிஷ் கூறினார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மாதவரம் சின்ன ரவுண்டானா அருகே ஐயப்பன் மோட்டார் பைக்கில் வந்தார். பின்னர் அங்கிருந்த மோனிஷ்(21) அவரது நண்பர்கள் தினேஷ்(22), தமிழ் (எ) படையப்பா(23), விஜயகுமார்(22) உள்ளிட்டோர் ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மோனிஷ் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியை காட்டி ஐயப்பனிடமிருந்து செல்போன், 3 சவரன் நகை மற்றும் மோட்டார் பைக் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர். பின்னர் தான் இவர்கள் மோசடி கும்பல் என்று ஐயப்பனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து ஐயப்பன் அளித்த புகாரின்பேரில் மாதவரம் போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED வேட்பாளர் பெயர்களை பேஸ்புக்கில் பதிவிட்ட இலை கூட்டணி கட்சிகள்