×

திருமலாவின் ஒயிட் கோல்ட் பால் அறிமுகம்

சென்னை: திருமலா பால் நிறுவனம் ஒயிட் கோல்ட் தூய எருமை பால் மற்றும் தயிர் வகையை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இது 100% திடமாகவும், க்ரீமியாகவும், இயற்கை புரத சத்து, வைட்டமின்ஸ் மற்றும் தாதுக்கள் நிறைந்தததாகவும் உள்ளது. இந்த ஒயிட் கோல்ட் எருமை பால் 500 மிலி 35 ரூபாய்க்கும், ஒயிட் கோல்ட் எருமை தயிர் 190 கிராம் 15 ரூபாய்க்கும், 500 கிராம் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. திடமான க்ரீம் வகையான எருமை பால் மற்றும் தயிர் வகைகளை எதிர்ப்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கான சரியான தேர்வாக இது அமையும்.

திருமலா பால் நிறுவனம் கடந்த 1996ம் ஆண்டு தொடங்கப்பட்டு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கிளைகளை விரிவுபடுத்தியுள்ளது. மேலும் தரமான மற்றும் தூய்மையான பால் பொருட்களை நியாயமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், இந்த புதிய பால், தயிர் அறிமுகம் செய்துள்ளதால் அனைவருக்கும் பயனுடையதாக இருக்கும் என்று இதன் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

Tags : Introduction ,Thirumala ,White Gold Ball ,
× RELATED திருமலாவின் ஒயிட் கோல்ட் பால் அறிமுகம்