×

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் 3வது மாடியில் சிக்கிய பூனை மீட்பு

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் 3வது மாடியில் கடந்த 4 நாட்களாக சிக்கிய பூனையை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக தனி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 3வது மாடி சிலாப்பில் கடந்த 4 நாட்களுக்கு முன் குதித்த பூனை ஒன்று, அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கியது. இதனால், சத்தமிட்டு கொண்டே இருந்தது. இதை பார்த்த நோயாளிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் நேற்று காலை ஏணி உதவியுடன் பூனையை பத்திரமாக மீட்டனர்.

Tags : floor ,Rayapettai Government Hospital ,
× RELATED பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில்...