மேட்டூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

மேட்டூர், ஜன.26: மேட்டூர் சதுரங்காடியில், திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மேட்டூர் நகர திமுக செயலாளர் காசிவிஸ்வநாதன் வரவேற்றார். சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் கோபால், மாணவரணி அமைப்பாளர் கண்ணன், மேச்சேரி ஒன்றிய பொறுப்பாளர் சீனிவாச பெருமாள், மேட்டூர் நகர அவைத்தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி பேசுகையில், ‘திமுக இல்லாவிட்டால் மத்திய அரசு, தமிழ்மொழியையும், இனத்தையும் அழித்திருக்கும். மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகள் அனைத்தையும் கபளீகரம் செய்து வருகிறது. மாநில சுயாட்சிக்காகவும், மாநில உரிமைகளை காக்கவும் துவக்கப்பட்ட இயக்கம் திமுக. தமிழ்நாடு என்றாலே வடக்கில் இருக்கும் மக்கள் மரியாதையுடன் பார்த்த காலம் மாறி, இந்திய துணைக்கண்டத்தில் எங்கு சென்றாலும் தமிழர்களை கவனமாகப் பார்க்கும் நிலைக்கு, கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி ஏற்படுத்தி உள்ளது. நமது உரிமைகளை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுத்துள்ளனர்,’ என்றார். கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர்கள் ஜஸ்டின் வில்பர்ட், அஸ்ரப் அலி, சேலம் மேற்கு மாவட்ட துணை செயலாளர் குடியரசிகீதா, மேட்டூர் நகரமன்ற முன்னாள் தலைவர் கந்தசாமி, கொளத்தூர் ஒன்றிய பொருப்பாளர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: