வாழப்பாடி அருகே பழுதான மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

வாழப்பாடி, ஜன.26: வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ஊராட்சி, மேலக்காடு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிணறு மூலம் பம்ப்செட் மோட்டார் வைத்து இயக்கி வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக, இங்குள்ள டிரான்ஸ்பார்மர் பொருத்திய கம்பம் பழுதடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகளுக்கும், சிங்கிபுரம் துணை மின் நிலைய அலுவலகத்துக்கும், சேலம் கலெக்டர் அலுவலகத்திலும், விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அசம்பாவிதம் நிகழும் முன்பாக, பழுதடைந்த மின் கம்பத்தை சீரமைக்க ேவண்டும் என அப்பகுதியினர் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>