குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ₹15.50 லட்சம் மோசடி கலெக்டரிடம் புகார் மனு

சேலம், ஜன.26:  தாரமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்த வடிவேல், அன்பழகன் முனுசாமி, முருகவேல், செல்வம், சண்முகவேல் ஆகியோர், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மோட்டூரை சேர்ந்தவர் ராசப்பன். இவர், நங்கவள்ளி, மேச்சேரி, கொளத்தூர் ஆகிய பகுதியில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தில் பம்ப் ஆப்ரேட்டர் வேலை வாங்கி தருவதாக கூறினார். இதனை நம்பி தாரமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் தனித்தனியாக ₹1 லட்சம், ₹2 லட்சம் என பணத்தை கொடுத்தாம். இதுவரை ₹15.50 லட்சம் அவரிடம் வழங்கி உள்ளோம். ஆனால், பல மாதங்களாகியும், அவர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகிறார். இது சம்பந்தமாக அவரிடம் கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை. இதேபோல் அவர் பலரிடமும் ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, எங்களது பணத்தை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories:

>