முசிறியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

முசிறி, ஜன.26: முசிறியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் இணைந்து 32வது போக்குவரத்து மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். முசிறி பஸ் நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் புஷ்பா தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், எஸ்ஐ ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முசிறி சப்-கலெக்டர் ஜோதிசர்மா கலந்துகொண்டு போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து பேசி இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடையே வழங்கப்பட்டது. முசிறி நகர பஸ் நிலையத்தில் துவங்கிய பேரணி முசிறி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் 250க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் ஹெல்ெமட் அணிந்து கலந்துகொண்டனர்.

Related Stories: