×

பாதாள சாக்கடை பணிகள் மந்தம்

திருச்சி, ஜன.26: திருச்சி 30வது வார்டில் பாதாள சாக்கடை பணிகள் மந்தமாக நடப்பதை கண்டித்து மாநகராட்சி வார்டு அலுவலகம் முன் ஆமையை விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடையாமல் உள்ளது. மாநகராட்சி 30வது வார்டில் விவேகானந்தர் நகர், நாகம்மை வீதி, ராஜீவ்காந்தி நகர், மாஜி ராணுவ காலனி, கணேசபுரம், மூகாம்பிகை நகர் விஸ்தரிப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலைகள் பெயர்க்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. ெபாதுமக்கள் சிரமப்பட்டு செல்கின்றனர்.

எனவே ஆமை வேகத்தில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை உடனே முடிக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேலகல்கண்டார்கோட்டை மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொன்மலை பகுதிக்குழு சார்பில் ஆமை விட்டு ஆர்ப்பாட்டம்  அறிவிக்கப்பட்டது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று பகுதி செயலாளர் கார்த்திக் தலைமையில் வார்டு அலுவலகத்தில் ஆமையை விட்டு போராட்டம் நடத்தினர். இதில் பாதுகாப்பு நின்ற போலீசார், வனஅலுவலர்கள் ஆமையை கைப்பற்றி அவர்களை கலைத்தனர்.

Tags :
× RELATED போலீசிடம் தகராறு வாலிபர் மீது வழக்கு