நாளை தைத்தேரோட்டம் உரிய நிவாரணம் வழங்க கோரி அழுகிய வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் தர்ணா கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

திருச்சி, ஜன.26:  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாளையொட்டி நேற்று ஏராளமான மக்கள் பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர். அப்போது அங்கு அழுகிய வெங்காய பயிர்களுடன் வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் அழுகிய வெங்காயத்தை தரையில் கொட்டி சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர். திருச்சியில் சமீபத்தில் பெய்த கனமழையால் திருச்சி மாவட்டத்தில் துறையூர் பகுதிகள், நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சின்னவெங்காயம் அழுகி வீணானது. ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து பின் விடுவித்தனர்.

Related Stories: