×

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி, ஜன.26: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்து வாக்காளர் தினம் எதற்காக கடைபிடிக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கியதோடு, ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்கும் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் உரிமையும், வலிமையும் உண்டு. அனைவரும் வாக்களிப்போம், ஜனநாயக இந்தியாவை போற்றுவோம் என்றார். ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர். திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ராஜசேகரன் தலைமையில் வாக்காளர் தின உறுதி மொழி ஏற்றனர். இதில் உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் சக்கரபாணி, ஒவிய ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதேபோல முத்துப்பேட்டை ஒன்றியம் தொண்டியக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமையில் வாக்காளர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் மகேஸ்வரி, பொற்செல்வி, சண்முகப்பிரியா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் அரசு உதவிபெறும் நடுநிலை ப்பள்ளியில், தலைமையாசிரியை தேவிலெட்சுமி தலைமையில் அனைவரும் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர். மூத்தவாக்காளர் பொன்னுசாமி யைகவுரவித்து ஆசிரியர் திராவிடமணி வாக்குப்பதிவு மைய ஊழியர்களும், அங்கன்வாடி பணியாளர்களுமான ராதா, மனோரஞ்சிதம், சகுந்தலா உள்ளிட்டோர் பேசினர். வலுவான ஜனநாயகத்திற்கு பெருமளவில் பங்கேற்போம். வாக்காளர் என்பதில் பெருமை கொள்வேன். வாக்களிக்க தயார் என்பேன் என்பனபோன்ற உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது