×

பெண் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

நீடாமங்கலம்.ஜன.26: தேசிய பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருவாரூர் சைல்டுலைன் மூலம் நீடாமங்கலம் பெரியார் சிலையில் இருந்து அண்ணா சிலைவரை 25 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் மகளிர்சைக்கிள் பேரணியாக சென்று பெண்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியினை நீடாமங்கலம் எஸ்ஐ குணசேகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார், திருவாரூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜீவானந்தம் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விளக்கி பேசினார்.

சைல்டுலைன் இயக்குனர் வினோத்குமார் பெண்குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம் பற்றியும், திருவாரூர் சைல்டுலைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன், குழந்தை தொழிலாளாளர்,குழந்தை கொத்தடிமை,குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பிச்சை எடுக்கும் குழந்தைகள், அனாதை குழந்தைகள், துன்புறுத்தப்படும் குழந்தைகள், காணாமல் போகும் குழந்தைகள்,வீட்டை விட்டு ஓடிப்போகும் குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் ஆகியவற்றிற்கு 24 மணி நேர இலவச அவசர தொலைபேசி எண்ணான 1098 ஐ தொடர்பு கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் நீடாமங்கலம் சைல்டுலைன் பொறுப்பு அணி உறுப்பினர் முருகேஷ் அனைவரையும் வரவேற்றார். அணி உறுப்பினர் ஆனந்தி நன்றி கூறினார். இறுதியில் நீடாமங்கலம் ரயில்வே காவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பேனா மற்றும் நோட்டு புத்தகம் வழங்கினார்கள்.

Tags : Awareness Cycle Rally on Girl Children's Day ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு