×

நீடாமங்கலம் அருகே அஞ்சல் துறையினரின் செல்வமகள் சேமிப்பு திட்டம் துவக்கி வைப்பு

நீடாமங்கலம், ஜன.26: நீடாமங்கலம் அருகே சித்தமல்லி மேல்பாதியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி அஞ்சல் துறையினர் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் நீடாமங்கலம் ஒன்றிய குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு துவக்கி வைத்து பேசினார். அஞ்சல் துறை துணை கண்காணிப்பாளர் பிரேம்ஆனந்த் தலைமை வகித்தார். அஞ்சல் துறை பணி மேற்பார்வையாளர்கள் மோகன்ராஜ், கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்தமல்லி மேல்பாதி ஊராட்சி தலைவர் குணசீலன் மற்றும் கிராம நிர்வாகிகள் பங்கேற்றனர். பத்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான செல்வகுழந்தை சேமிப்பு திட்டத்தின் முதல் கணக்கை சித்தமல்லி சர்வமானியம் வெண்பா தென்கோவன் என்கிற பெண் குழந்தை பெயரில் துவங்கிட விண்ணப்ப படிவத்தை ஒன்றிய குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் வழங்கினார். சித்தமல்லி அஞ்சலக அதிகாரி அசோக்குமார் நன்றி கூறினார்.

Tags : Launch ,Needamangalam ,Postal Department ,
× RELATED சட்டமன்ற தேர்தலையொட்டி...