×

நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தல் 2012-19 வரை பணியில் சேர்ந்த பருவநிலை ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும்

திருவாரூர், ஜன.26: 2012 முதல் 2019 வரை பணியில் சேர்ந்த பருவ நிலை ஊழியர்களை நிரந்தர படுத்த வேண்டும் என திருவாரூரில் நடந்த நுகர்பொருள் வாணிப கழகதொழி லாளர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சிஐடியூ மண்டல பொதுக்குழு மாநாடு மண்டல தலைவர் ஜோதிபாசு தலைமையில் திருவாரூரில் நடந்தது. இதில், மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன், சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, மண் டல செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் அனீபா உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டில், மாவட்டத்தில் 463 இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும், 2012 முதல் 2019 வரை பணி யில் சேர்ந்த பருவ நிலை ஊழியர்களை நிரந்தர படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சுமைதூக்கும் பணியாளர்களுக்கு பாது காப்பு உபகரணங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிவசதி, கழிவறைகள் ஏற்பாடு செய்ய வேண்டும், கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை ஏற்றும் பனியின் போது லாரி உரிமையாளர்கள் கூடுதலாக பணம் கேட்பதை நிர்வா கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக வைத்திலிங்கம் வரவேற்றார். ராஜா நன்றி கூறினார்.

Tags : Consumer Protection Center ,
× RELATED கோவையில் தேர்தல் பணியில் 21,500 பணியாளர்கள்