×

வேலூர் தினகரன்-விஐடி பல்கலை. இணைந்து நடத்திய ‘வெற்றி நமதே’ கல்வி நிகழ்ச்சியில் திரண்ட ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள்: வினா-விடை தொகுப்பு புத்தகத்தால் மகிழ்ச்சி

 

வேலூர்: வேலூர் தினகரன்-விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியை விஐடி துணைத்தலைவர் சங்கர்விசுவநாதன் இன்று தொடங்கி வைத்தார். மக்கள் பிரச்னைகளை தீர்வுக்காக முன்னெடுத்து சென்று களத்தில் முன்நிற்கும் தமிழகத்தின் நம்பர் 1 நாளிதழ் தினகரன். சர்வதேச அரங்கில் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது வேலூர் விஐடி பல்கைலைக்கழகம். இவை இரண்டும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வை எப்படி எதிர்கொள்வது, உயர்கல்விக்கு வழி காட்டும் வகையிலும் ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

இதன்மூலம் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று உயர்கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை பிடித்ததுடன் தங்கள் வாழ்வில் தடம் பதித்து வருகின்றனர். தற்போது 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்2 பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடும். கனவுகளோடும் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை ஒரே இடத்தில் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக அறிந்து கொள்ளும் வகையில் வேலூர் தினகரன் நாளிதழும், வேலூர் விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து ‘வெற்றி நமதே’ வழிகாட்டும் நிகழ்ச்சி வேலூர் விஐடி பல்கலைக்கழகம் அண்ணா அரங்கில் இன்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் தினகரன் சென்னை பதிப்பு செய்தி ஆசிரியர் எஸ்.மனோஜ்குமார் வரவேற்று பேசினார். விஐடி பல்கலைக்கழக நிறுவனர், வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் வெற்றி நமதே நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பிரேமலதா ஆகியோர் வாழ்த்தி பேசினர். கலெக்டர் சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியை கவிஞர் லக்குமிபதி தொகுத்து வழங்கினார். வேலூர் தினகரன் பொது மேலாளர் டி.தயாள் நன்றி கூறினார்.

தினகரன்-விஐடி இணைந்து நடத்திய வெற்றி நமதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கு குளிர்பானம், தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் குறிப்புகள் எடுக்க நோட்பேட், பேனா ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து அவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான வினா-விடை தொகுப்பு புத்தகம் ‘தினகரன்’ சார்பில் வழங்கப்பட்டது. இதனை பெற்ற மாணவ, மாணவிகள் ‘தினகரன்’ நாளிதழின் இப்புத்தகம் நிச்சயம் எங்களுக்கு பயனளிக்கும் என்று தெரிவித்தனர்.

Tags : Vellore Dinakaran-VIT University ,Vellore ,Vice President ,Sankarviswanathan ,Tamil Nadu ,
× RELATED பெரம்பலூரில் கல்குவாரியில் மண்...