×

ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் மன்னார்குடி அருகே நின்ற கார் மீது லாரி பயங்கர மோதல் 2 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

மன்னார்குடி, ஜன. 26: தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (48). ஹோட்டல் அதிபரான இவர் தனது நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள காரில் நேற்று காலை மன்னார்குடி வந்தார். நெடுவாக்கோட் டை அருகே உள்ள கல்யாண மண்டபத்தின் எதிரே சாலையோரத்தில் தனது காரை நிறுத்தி விட்டு மண்டபத்திற்கு உள்ளே சென்று விட்டார். அப்போது, வடுவூரில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த லாரி டிரைவர் கட்டுப் பாட்டை இழந்து கல்யாண மண்டபம் எதிரே சாலையோரம் நின்ற ரமேஷ் காரின் மீது பயங்கரமாக மோதி கவிந்தது. காரில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை. இருப்பினும் கார் அப்பளம் நசுங்கியது. லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியோடி விட்டார்.

இந்த விபத்தால் மன்னார்குடி-தஞ்சை இடையிலான நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மன்னார்குடி டவுன் எஸ்ஐ வரலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலை யில் கவிழ்ந்து கிடந்த லாரி, கார் ஆகியவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர். இதுகுறித்து போலீசார் லாரி டிரைவரான மன்னார்குடி மேல கோபுரவாசல் பகுதியை சேர்ந்த சிவா (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Teachers ,union ,Mannargudi ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...