சென்னை : பெண் கல்விக்கு முதல்வர் தரும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு 11.9% பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு பெண்கள் உற்பத்தித் துறையில் அதிகளவில் பங்களிப்பு செய்து வருகிறார்கள் என்றும் ஆண்களுக்கு பெண்கள் சமம் என திட்டங்கள் கொண்டு வந்ததால் தமிழ்நாடு நம்பர்1 மாநிலமாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
