×

திருவாரூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர், ஜன.26: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறுவதாக கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நாளை (27ம் தேதி) நடைபெறுகிறது. இதனையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் முன்னதாக காலை 11 மணியளவில் திருவாரூர்  வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கும், பகல் 12 மணியளவில் மன்னார்குடி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கும் நடைபெறுவதால் மாவட்டத்தில் உள்ள முன்னோடி விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு தக்க ஆலோசனைகளை வழங்குமாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Tags : grievance meeting ,Thiruvarur ,
× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டம்