×

தவ்ஹீத் ஜமாத் பொதுக்குழு கூட்டம்

திருவாரூர், ஐன. 26: தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில செயலாளர் சையது முகமது தலைமையில் திருவாரூரில் நடைபெற்றது மாநில பேச்சாளர் அஷ்ரப்தீன் பிர்தௌசி, மாவட்ட தலைவர் முகமது, செயலாளர் பாசித், பொருளாளர் அப்துல்காதர் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, அரசு போட்டி தேர்வு குறித்து மாவட்ட துணைத்தலைவர் பீர்முகம்மது பேசினார். தொடர்ந்து மாநில செயலாளர் திருச்சி சையது முகமது கூறுகையில், மத்திய அரசு வேளாண் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசு துறைகளில் இஸ்லாமியர்களுக்கு மாநில அரசு 7 சதவீதமாக உயர்த்திட வேண்டும். மத்திய அரசு 10 சதவீதமாக உயர்த்திட வேண்டும்.
குடியுரிமை சட்டத்திருத்தத்தை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தக்கூடாது என்றார். முன்னதாக மாவட்ட துணை செயலாளர் இஸ்மத் வரவேற்றார். தாரிக் மாலிக் நன்றி கூறினார்.

Tags : Tawheed Jamaat General Committee Meeting ,
× RELATED சோளத்தட்டை, வைக்கோல் போர் எரிந்து நாசம்