தெற்கலங்கத்தில் ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடியை சீரமைக்க வேண்டும்

தஞ்சை,ஜன.26 : தஞ்சை தெற்கலங்கத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள் உள்ளன. இதனால் அச்சாலையில் பகல், இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான வாகனம் வந்து செல்கின்றது. இந்நிலையில் தெற்கலங்கத்தில் 3க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் மூடி, உடைந்துள்ளது. அதில் கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் சென்று வந்ததால், மேன்ஹோல் மூடி மேலும் உள்வாங்கி உள்ளது. இதனால் சுமார் ஓரு அடிக்கு மேல் பள்ளமானது. இது போன்ற ஆபத்தான நிலையில் இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள், பாததாரிகள் செல்லும் போது, அதில் விழுந்து விபத்துக்குளாகின்றனர். மேலும், மேன்ஹோல் மூடி உள் வாங்கியதால், அதன் அருகிலுள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல்களிலிருந்து கழிவு நீர் சில நேரங்களில் வெளியேறி, வெள்ளக்காடாக சாலையில் ஓடுகிறது.  இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், உணவு விடுதிகளில் மக்கள் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுகிறது. மேலும், சாலையில் செல்பவர்கள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தஞ்சை, தெற்கலங்கத்தில் ஆபத்தான நிலையிலுள்ள மேன்ஹோல் முடியை சீர் செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: