திட்டை முத்துமாரியம்மன் கோயில் குளத்திற்கு செல்லும் நீர்வழி பாதையில் ஆக்ரமிப்பை அகற்ற வேண்டும்

தஞ்சை, ஜன.26: தஞ்சை அருகே திட்டை முத்துமாரியம்மன்கோயிலுக்கு சொந்தமான மூன்றே முக்கால் ஏக்கர் குளத்திற்கான நீர்வழி பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அக்கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில், தஞ்சை அருகே திட்டை கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான மூன்றே முக்கால் ஏக்கர் பரப்பள வில் குளம் உள்ளது. பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த இக்குளம் கடந்த 2019ம் ஆண்டு ஓரளவு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதையடுத்து குளத்திற்கு நீர்வந்ததையடுத்து அப்போதைய மாவட்ட கலெக்டர் மூலம் குளத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிலையில் குளத்திற்கு நீர் வரக்கூடிய நீர்வழிப்பாதை மற்றும் குளத்தை சுற்றியும் இன்னும் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை. எனவே உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்திற்கு முழுமையாக அளவில் தண்ணீர் வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: