அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு குடியரசு தினத்தையொட்டி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

தஞ்சை, ஜன.26: குடியரசு தினத்தையொட்டி தஞ்சை ரயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தின விழா இன்று (26ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தஞ்சை ரயில்வே இருப்பு பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வேலன் மற்றும் போலீசார் தஞ்சை ரயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். ரயில் நிலைய நுழைவு வாயிலில் நின்று பயணிகள் கொண்டு வந்த பேக், உடைமைகள், பொருட்களை மெட்டெல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். இதேப்போல் ரயில் உள்ளேயும் ஏறி பயணிகளின் உடைமைகளை பரிசோதித்தனர். அப்போது திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் வந்து நின்றது. அதில் ஏறி வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

மேலும் ரயில், தண்டவாளத்தில் மோப்பநாய், நவீன கருவி மூலம் வெடிக்குண்டு சோதனை நடத்தினர். சந்தேகப்படும் படி யாராவது ரயில் நிலையத்தில் சுற்றி திரிகிறார்களா? என மப்டியில் நின்றும் கண்காணித்து வருகின்றனர். மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதை பார்த்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும், சந்தேகத்துக்குரிய பொருள் கிடப்பதை பார்த்தால் அதை எடுக்க கூடாது என்று பயணிகளிடம் அறிவுறுத்தினர். தொடர்ந்து ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேப்போல் தஞ்சை பஸ் நிலையம், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: