×

பயணிகள் எதிர்பார்ப்பு புதுகை விஜய் திருமண மஹாலில் விஜய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை, ஜன.26: புதுக்கோட்டை டவுன் சத்தியமூர்த்தி சாலையில் உள்ள விஜய் திருமண மஹால் முன் புதிதாக கட்டப்பட்டுள்ள விஜய விநாயகர் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நாளை (27ம் தேதி) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் நடைபெறவுள்ளது. இதையொட்டி 2ம் கால யாகபூஜைகள் யந்திர ஸ்தாபனம், ஸ்துபிஸ்தானம், பூர்ணாஹுதி, தீபாராதனை இன்று (26ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கி பகல் 12 மணி வரையிலும், 3ம் கால யாக பூஜைகள் பூர்ணாஹுதி, தீபாராதனை மாலை 6 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடைபெறுகிறது. 4ம் கால யாகபூஜைகள் லெட்சுமி பூஜை, ஸ்பர்ஷாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்படுதல், நாளை (27ம் தேதி) காலை 6 மணிக்கு தொடங்கி 9.30 மணி வரை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 9.50 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

தொடர்ந்து அன்று மதியம் சிறப்பான அன்னதான நிகழ்ச்சி நடைபெறுகிறது. யாகசாலை பூஜை பேரையூர் ராஜா கார்த்திகேய சிவாச்சாரியார் முன்னின்று நடத்துகிறார். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விஜய் நிறுவன தொழிலதிபர் பழனிவேல் மற்றும் அவரது சகோதரர்கள் முருகானந்தம், ரவிசந்திரன் முன்னின்று செய்து வருகின்றனர். விழாவில் புதுக்கோட்டை நகர ஆன்மீக அன்பர்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்குமாறு விழாக்குழுவினர் மற்றும் விஜய் பேலஸ் நிறுவனத்தார் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...