×

சொத்தை அபகரித்த மகன் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகம் முன் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரை

பெரம்பலூர், ஜன.26: தனது சொத்தை அபகரித்த மகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனு டன் வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், எசனை, கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி செல்லம்மாள் (70). செல்லம்மாளின் கணவர் கிருஷ்ணமூர்த்தி இறந்து 25 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் விவசாயக் கூலி வேலை செய்து வரும் செல்லம்மாளின் வீடு மற்றும் நிலத்தை இவரது மகன் செல்வராஜ் அபகரித்து விட்டதாகவும், அந்த நிலத்தை மீட்டுத் தரவேண்டுமென பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தற்கொலை போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்காக செல்லம்மாள் நேற்று காலை 5 லிட்டர் மண்ணெண் ணெய் கேனுடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்திருந்தார். இதனை கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்துவிட்டு வேகமாக ஓடிச்சென்று மூதாட்டி கொண்டுவந்த மண்ணெ ண்ணைக் கேனைப் பறிமுதல் செய்தனர். பிறகு செல்லம்மாளுக்கு அறிவுரைகள் கூறி, அவரது கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகம் முன்புள்ள மனுக்கள் பெட்டியில் போட்டுவிட்டு போகச் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இத னால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Collector ,Office ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...