- காங்கிரஸ்
- கராத்தே தியாகராஜன்
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- பாஜக
- மாநில செயலாளர்
- விஜய்
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
- மோடி
சென்னை: தமிழக பாஜ மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
நடிகர் விஜய்யின், ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் சென்சாரில் சிக்கியுள்ள பிரச்னையை மையப்படுத்தி, பிரதமர் மோடியை மிக தவறாக விமர்சித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கும் கருத்துகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மத்திய தணிக்கை வாரியம் சுதந்திரமாக இயங்கும் தனி அமைப்பு. தணிக்கை விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் விஜய்யின் படத்துக்கு சான்றிதழ் கிடைத்து விட போகிறது. ஆனால், விதிகளுக்கு புறம்பாக, ஆட்சேபனைக்குரிய வகையில் இருந்திருப்பதால்தான் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சென்சார் போர்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு கலைத்துறை மீது காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்வதும், கலைத்துறையை முடக்குவதும், கலைத்துறையினரை மிரட்டுவதும் காங்கிரஸ் தலைவர்களுக்கு தான் கை வந்த கலை. பிரதமர் மோடி மீது அவதூறு பரப்பிய கிரிஷ் சோடங்கரை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
