×

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 97 மனுக்கள் பெறப்பட்டது

பெரம்பலூர், ஜன.26: பெரம்பலூர் மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் 97மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி, மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்  வெங்கட பிரியா அறிவுரையின்படி, அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று (25ம் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, ஆதரவற்ற விவ சாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, பட்டா கோருதல், பட்டா மாறுதல், கல்விக்க டன் கோருதல், இலவச தை யல் இயந்திரம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு தரப்பு கோரிக்கை மனுக்கள் பெற ப்பட்டன.

அதனடிப்படையில் பெரம்பலூர் தாலுகா 19மனுக்களும், வேப்பந்தட்டை தாலுகாவில் 2 மனுக்களும், குன்னம் தாலுகாவில் 6 மனுக்களும், ஆலத்தூர் தாலுகாவில் ஒரு 1 மனுவும், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாளுக்காக வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டி யில் 69 மனுக்களும் என மொத்தம் 97 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் பதிவு செய்யப் பட்டு, அதற்கான ஒப்புதல் ரசீது வழங்கி, மனுதாரர்க ளுக்கு எந்தவித காலதாமதம் இன்றி விரைந்து நடவ டிக்கை மேற்கொண்டு 15 நாட்களுக்குள் பதிலளிக்கு மாறும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு ள்ளது.

Tags : Perambalur ,district ,meeting ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி