×

தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு அமைப்பு: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

சென்னை: தவெக தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாக கொண்டு, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக சிறப்பு குழு அமைக்கப்படுகிறது.

இந்த குழு தமிழகம் முழுவதும் பொதுமக்கள், சிறு மற்றும் குறுதொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுநர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும், தேவைகளையும் அறிந்து தரவுகளை பெறவுள்ளது.

அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும், ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய இருக்கிறோம். இக்குழுவுக்கு கழக தோழர்கள் முழு ஒத்துழைப்பையும், தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு நடிகர் விஜய் கூறியுள்ளார்.

Tags : TNA ,Vijay ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...