×

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சுயஉதவிக்குழுவினர் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் துவக்கி வைத்தார்

அரியலூர், ஜன.26: அரியலூரில்தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணா–்வு நிகழ்ச்சிகள் கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்றது. அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து, வாக்காளராகப் பதிவு செய்யவும், வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் வலியுறுத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர்சுயஉதவிக்குழு பேரணியை கலெக்டர் .ரத்னா துவக்கி வைத்தார். பேரணி, அரியலூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. மேலும், வாக்காளா் விழிப்புணா–்வு ஒட்டுவில்லைகள், வாக்குச்சாவடி மையங்கள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் பொதுஇடங்களில் ஒட்டப்பட்டு, விழிப்புணா–்வு ற்படுத்தப்பட்டது.

இதனைத்தொடா–்ந்து, அரியலூர் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, தேசிய வாக்காளா் தின உறுதிமொழியை கலெக்டர் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலா–்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் ஏற்றுக் கொண்டனா். பின்னா், வாக்காளர் தினத்தை முன்னிட்டு அரசு துறை அலுவலா–்கள் மற்றும் பள்ளிகளில் வாக்காளா் விழிப்புணா–்வு ஏற்படுத்துவது தொடா்பாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது, மேலும், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பாிசுகளை கலெக்டர் வழங்கினார்.மேலும், வாக்காளா் சிறப்பு சுருக்க திருத்தம் 2021 தொடா்பாக நடைபெற்ற 18வயது நிறைவடைந்த வாக்காளா–்களுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், டிஆர்ஓ ஜெய்னுலாப்தீன், கலெக்டரின் நோ்முக உதவியாளா் (பொது) ரவிச்சந்திரன், கோட்டாட்சியா் ஜோதி, தனி தாசில்தார்(தோ்தல்) குமரையா, அரியலூர் தாசில்தார் சந்திரசேகரன், மற்றும் பள்ளி மாணவர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினா், அரசு அலுவலா–்கள் கலந்துகொண்டனா்.

Tags : Collector ,Self Help Group Awareness Rally ,National Voter Day ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...