×

கடமைக்கு செய்வதாக விவசாயிகள் வேதனை அரியலூர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

அரியலூர், ஜன.26: அரியலூர் மாவட்ட எஸ்பி சீனிவாசன் உத்தரவின் பேரில், 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் துறையினர் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி நேற்று அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆர்டிஓ செல்வராசு, மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்அரியலூர் போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் வாகன ஓட்டி மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விரிவாக விளக்கினார். மேலும் குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் அரியலூர் கல்லங்குறிச்சி ரவுண்டானா மற்றும் கலெக்டர் அலுவலக ரவுண்டானா பகுதியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

Tags : Ariyalur College ,
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது