×

திருக்குவளை அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கீழ்வேளூர், ஜன. 26: திருக்குவளை அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

நாகை மாவட்டம் திருக்குவளையில் அங்காளபரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்தது. இதையடுத்து கும்பாபிஷேக பணிகள் துவங்கியது. இதையொட்டி 22ம் தேதி யாகசாலை பூஜை நடந்தது. 23ம் தேதி கணபதி பூஜை, காப்பு கட்டுதல், யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜை, கோமாதா பூஜை, மூன்றாம் கால யாகபூஜை நடந்தது. நேற்று நான்காம்கால யாகபூஜை நடந்தது. பின்னர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று இரவு சுவாமி வீதியுலா நடந்தது.

Tags : Thirukuvalai Angala Parameswariyamman Temple Kumbabhishekam Keezhvelur ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் பனி மூட்டம்...