×

நாகை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் தினம் கொண்டாட்டம் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கல்

நாகை, ஜன. 26: நாகையில் நடந்த வாக்காளர் தின கொண்டாட்டத்தில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. நாகை கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. கலெக்டர் பிரவீன்பிநாயர் தலைமை வகித்து வாக்காளர் தின விழிப்புணர்வு தொடர்பாக நடந்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, கோல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதைதொடர்ந்து அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், மாணவர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, சிறந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கும், 4 சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டிஆர்ஓ இந்துமதி, திட்ட இயக்குனர், மகளிர் திட்டம் பாலமுருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஆர்டிஓ பழனிகுமார், பயிற்சி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, தேர்தல் பிரிவு தாசில்தார் பிரான்சிஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : winners ,Voter ,Naga Collector ,celebrations ,
× RELATED நெல்லையில் கண்காட்சி நிறைவு ஓவிய படைப்பாளிகளுக்கு பரிசு வழங்கல்