×

காரைக்கால் கடற்கரை சாலையில் இன்று குடியரசு தினவிழா கொண்டாட்டம்

காரைக்கால், ஜன. 26: காரைக்கால் கடற்கரை சாலையில் இன்று காலை 9 மணிக்கு குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறத. கலெக்டர் அர்ஜுன்சர்மா தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். மேலும் சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிக்கிறார். விழாவில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள், சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள் பங்கேற்கின்றனர். எனவே மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வந்து பங்கேற்க வேண்டும். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Republic Day ,celebration ,Karaikal Beach Road ,
× RELATED குடியரசு தினத்தன்று ஸ்டென்சில் ஆர்ட்...