×

காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

நாகை, ஜன. 26: நாகையில் காவல் துறையினரின் அணிவகுப்பு பேரணி நடந்தது. தமிழக சிறப்பு காவல்துறை இயக்குனர் ராஜேஷ்தாஸ் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் காவலர் மாதிரி அணிவகுப்பு ஊர்வலம் நடந்து வருகிறது. இதன்படி நாகையில் நேற்று காவல் துறையினர் அணிவகுப்பு பேரணி நடந்தது. எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா பேரணியை துவக்கி வைத்தார். நாகை அருகே புத்தூர் ரவுண்டானாவில் துவங்கிய அணிவகுப்பு பேரணியில் சட்ட ஒழுங்கு பிரச்னையின்போது காவல்துறையால் மேற்கொள்ளப்படும் நடைமுறை மற்றும் யுக்திகள் குறித்தும், பேரிடர் காலத்தில் துரிதமாக செயல்படுவது குறித்தும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து காவலர்களை கொண்டு மாதிரி அணிவகுப்பு நடந்தது. இதில் கலவர நேரங்களில் கலவரங்களை கட்டுப்படுத்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனம் வஜ்ரா, அதிவிரைவு படை வாகனம், ஈகிள் வாகனம் என அனைத்தும் வந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று எஸ்பி அலுவலகத்தில் பேரணி நிறைவு பெற்றது.

Tags : parade ,
× RELATED மயிலாடுதுறையில் போலீசார் கொடி அணிவகுப்பு