×

உடனடியாக தண்ணீர் நிறுத்தம் சீர்காழி அருகே நாங்கூரில் புகழ்பெற்ற கருட சேவை உற்சவத்துக்கு அனுமதிக்க வேண்டும்

சீர்காழி, ஜன. 26: இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: சீர்காழி அருகே நாங்கூரில் 108 திவ்யதேச பெருமாள் கோயில்களில் 11 திவ்யதேச கோயில்கள் அமைந்துள்ளன. இந்த கோயில்களில் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக கருடசேவை உற்சவம் தை மாத அமாவாசைக்கு அடுத்த நாள் நடைபெறும். நாங்கூர் பகுதியில் உள்ள கோயில் தெய்வங்களான நாராயணபெருமாள், குடமாடும் கூத்தர் பெருமாள், செம்பொன்னரங்க பெருமாள், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம பெருமாள், வரதராஜபெருமாள், வைகுந்தநாத பெருமாள், மாதவன் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய பெருமாள்கள் அங்குள்ள மணி மாடக்கோயில் முன் எழுந்தருளும்போது திருமங்கை ஆழ்வாரையும் எழுந்தருள செய்து பாசுரங்கள் பாடப்பட்டு தீபாராதனை, சுவாமிகளின் வீதியுலா நடைபெறும். இந்த கருடசேவை உற்சவம் இந்தாண்டு பிப்ரவரி 12ம் தேதி நடத்த வேண்டும். ஆண்டுதோறும் ஒரு மாதத்துக்கு முன்பே விழா ஏற்பாடுகள் உற்சவ கமிட்டியினரால் செய்யப்படும். ஆனால் இந்தாண்டு இதுவரை உற்சவத்துக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யாதது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே கொரோனா தொற்று தொடர்பாக அரசு அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் சில வரையரைகளுடன் கருடசேவை உற்சவம் நடைபெற மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Karuta ,Nangur ,service festival ,Sirkazhi ,
× RELATED நாங்கூரில் பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு