×

கலெக்டருக்கு கோரிக்கை மனநிலை பாதித்து சுற்றி திரிந்த திண்டுக்கல் வாலிபர் மீட்பு

மயிலாடுதுறை, ஜன. 26: திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரத்தை சேர்ந்ர் அழகர் மகன் சரவணன் (40). திருமணமாகி 20 ஆண்டாகியும் குழந்தை இல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு மனைவியை பிரிந்த நிலையில் இருந்தார். தாய், தந்தை மறைந்த நிலையில் சரவணனின் சகோதரர் முருகேசன் (50) என்பவரது வீட்டில் இருந்து அண்ணனுடன் கூலி வேலை பார்த்து வந்தார். அடிக்கடி மனநலம் பாதித்து தன்னை அறியாமல் எங்கோ சென்று விடுவதும், திரும்ப வருவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கால் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் அனைவரும் வீட்டில் இருந்தனர். திடீரென ஒருநாள் சரவணன் மாயமானார். இதையடுத்து அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள ஒரு அறக்கட்டளை சார்பில் வீதிகளில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி அதை வீடியோவாக எடுத்து முகநூல் பதிவில் சரணவன் வெளியிட்டிருந்தனர். இந்த முகநூல் பதிவில் சரவணன் உணவு வாங்குவது தெரியவந்தது. இதையடுத்து அறக்கட்டளையினரிடம் தொடர்பு கொண்டு உறவினர்கள் கேட்டபோது குத்தாலம் பகுதியில் சரவணன் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் குத்தாலம் காவல் நிலையத்துக்கு சரவணனை அழைத்து கொண்டு அறக்கட்டளையினர். பின்னர் அங்கேயே அவருக்கு முடிதிருத்தம் செய்து குளிப்பாட்டி புதுசட்டை போட்டு விட்டு சரணவனை சகோதரர் முருகேசனிடம் ஒப்படைத்தனர். தொலைந்துபோன சரவணனை பார்த்து கண்ணீர மல்க மீண்டும் அவரை வீட்டுக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர்.

Tags : Collector Dindigul ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய காவல்துறை...