வாங்கல் அருகே சேவல் சண்டை நடத்திய 3 பேர் மீது வழக்கு

கரூர், ஜன. 26: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே சேவலை வைத்து சண்டையில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள நீலியம்மன் கோயில் அருகே சேவல் சண்டை நடைபெறுவதாக வாங்கல் போலீசார்களுக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற வாங்கல் போலீசார், அந்த பகுதியில் சேவலை வைத்து சண்டையில் ஈடுபட்ட பார்த்தீபன், மணிகண்டன், கார்த்திக் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து, இரண்டு சேவல்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>