×

அரசு அலுவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சித்த மருந்து பொருட்கள் பெட்டகம்

கரூர், ஜன. 26: கரூர் மாவட்டத்தில் பணியாற்றக்கூடிய அரசு அலுவலர்களுககு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய சித்த மருந்து பொருட்களை கலெக்டர் மலர்விழி அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். பின்னர் இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், அரசுத்துறையை சேர்ந்த அலுவலர்கள் என அனைவரின் ஒருங்கிணைந்த செயல்பட்டால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. பல்வேறு நிலைகளில் பணியாற்றக்கூடிய அரசு அலுவலர்கள் பல்வேறு காரணங்களால் தங்களது உடல்நிலையை கவனித்துக் கொள்வதில் அக்கறை செலுத்துவதில்லை.சித்த மருத்துவம் பாரம்பரியமான மருத்துவ முறையாகும். எந்தவொரு ஒரு பக்கவிளைகளும் ஏற்படாமல் நோயை குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட அமுக்ரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், ஆடாதொடை மணப்பாகு, தாளிசாதி சூரணம் போன்ற மருந்து பொருட்களை வழங்க உள்ளோம். முதற்கட்டமாக, 1000 அரசு அலுவலர்களுக்கு இந்த மருந்து பொருட்கள் வழங்கப்படவுள்ளது. ஒரு பெட்டகம் ரூ. 100 என்ற மதிப்பீட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் இந்த மருந்து பொருட்களை மருத்துவரின் அறிவுரையின்படி முறையாக உட்கொண்டு உடல்நலத்தை பாதுகாக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில்,டிஆர்ஓ ராஜேந்திரன், நேர்முக உதவியாளர் அருள், சித்த மருத்துவர்கள் பர்வேஷ், கவிதா உட்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Tags : government officials ,
× RELATED 3 அரசு உயரதிகாரிகள் மீது லஞ்ச வழக்கு