மக்கள் எதிர்பார்ப்பு தேங்காய் கிலோ ரூ.36க்கு ஏலம்

க.பரமத்தி, ஜன.26: தேங்காய் கிலோ ரூ.36க்கு ஏலம் போனது. ஒரு மாதத்திற்கு பிறகு ரூ. 3 உயர்ந்து ஏலம் போனது. கரூர், சின்னதாரபுரம் ஒன்றிய பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு கொப்பரை தேங்காய்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 100மூட்டைகளில் 5079எடை கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.120, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.121, ஏலம் போனது. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் கிலோவிற்கு ரூ.1குறைந்து ஏலம் போனது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இறங்கு முகமாக குறைந்து ஏலம் போகிறது. இதே போல தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 2348கிலோ எடையுள்ள 7602தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலை குறைந்த விலையாக ரூ.28, முதல் ரகம் அதிக விலையாக ரூ.36, ஏலம் போனது. கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு ரூ.3 உயர்ந்து ஏலம் போனது.

Related Stories: