×

ஒரு மாதத்திற்கு பிறகு ரூ.3 உயர்வு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்

குளித்தலை, ஜன. 26: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தவ்ஹீத் ஜமாத் சார்பில் குளித்தலையில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் குளித்தலை பள்ளிவாசல் தெருவில் நடைபெற்றது .கூட்டத்திற்கு குளித்தலை கிளை தலைவர் முகமது ஹனிபா தலைமை வகித்தார்.கிளை செயலாளர் அப்துல்லா வரவேற்றார். மாநில செயலாளர் அப்பாஸ் தலைமை பேச்சாளர் அபூபக்கர் சித்திக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் .நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் 3 வேளாண் சட்டங்களை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் முடிவில் கிளை பொருளாளர் முகமது இப்ராகிம் நன்றி கூறினார்.

Tags : Central Government ,
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.....