×

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என மிரட்டுகின்றனர் தலித் ஊராட்சி பெண் தலைவர் புகார்

விருதுநகர்,ஜன.26: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ராஜபாளையம் ஒன்றியம் புதூர் ஊராட்சி தலைவர் ராமலட்சுமி மனு அளித்தார். இதன் பின் அவர் கூறுகையில், ``ராஜபாளையம் ஒன்றியம் புத்தூர் ஊராட்சியில் புத்தூர், வாழவந்தாள்புரம், வேதநாயகிபுரம் கிராமங்கள் உள்ளன. 9 வார்டு உறுப்பினர்களை கொண்ட ஊராட்சியின் தாழ்த்தப்பட்ட பெண் தலைவர் என்பதால் என்னை மற்ற சமூகத்தினர் மிரட்டுகின்றனர். ஊராட்சியின் செயலாளர் நீராவி, தனக்கு வேண்டிய ஆறுமுகத்தாய் என்பவரை 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணித்தளப் பொறுப்பாளராக வைத்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தளப்பொறுப்பாளரை 100 நாட்கள் முடிந்ததும் மாற்ற வேண்டும்.

ஆனால் மாற்ற மறுத்து வேறு பெயரில் பழைய பொறுப்பாளரை பணியாற்ற வைத்துள்ளனர். அவரையும், சாதிய உணர்வுடன் செயல்படும் ஊராட்சி செயலரை மாற்ற கோரி ஜன.8ல் மனு அளித்தேன். அதற்கு ஊராட்சி துணைத்தலைவர்,`` 3 உறுப்பினர்கள் மற்றும் 10 பேர் சேர்ந்து யாரையும் மாற்றக்கூடாது என எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லையாரும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம். உங்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்’’ என மிரட்டுகின்றனர். ஊராட்சியில் சாதிப்பிரச்னையின்றி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல செயலாளர், பணித்தளப் பொறுப்பாளர் இருவரையும் மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags : woman leader ,
× RELATED ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை...