- திருக்குறள்
- ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- ஓசூர்:
- திருக்குறள் வாரம்
- திருக்குறள் கலை
- தமிழ்நாடு அரசு
- திருவள்ளுவர் சிலை
ஓசூர் : ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள திருக்குறள் வாரம் மற்றும் திருக்குறள் கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
முதல் நாளான நேற்று முனைவர் சரவணன் ‘இன்றைய இளைஞர்களும் திருக்குறளும்’ என்ற தலைப்பிலும், முனைவர் தனராசு ‘வையத்துள் வாழ்வாங்கு வாழவைக்கும் வள்ளுவம்’, முனைவர் நிமலன் மரகதவேல் ‘திருக்குறள் சொல்லும் தலைமைத்துவம்’, முனைவர் தமிழ்கவிதா ‘குறள் சொல்லும் வாழ்வியல்’ ஆகிய தலைப்புகளில் கருத்துரையாற்றினர்.
2ம் நாளில் புலவர் கார்த்தியாயினி ‘வள்ளுவரும் பெரியாரும்’ என்ற தலைப்பிலும், முனைவர் வெங்கடேசன் ‘வள்ளுவரின் மருத்துவப் பார்வை’, முனைவர் பேகம் ‘திருக்குறளில் அறிதல் கோட்பாடு’, முனைவர் திலகவதி ‘குறள் வலியுறுத்தும் வாழ்வியல் நெறிகள் ஆகிய தலைப்புகளில் கருத்துரையாற்றினர். முன்னதாக திருக்குறள் குறித்து உருவக் கட்டுரை, குறள் வினாடி வினா, விவாத மேடை ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.
கல்லூரி முதல்வர் பாக்கியமணி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். புள்ளியல் துறைத்தலைவர் பேராசிரியர் கருணாநிதி வாழ்த்தி பேசினார். முனைவர் சரஸ்வதி வரவேற்றார். முனைவர் செல்வராணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முனைவர் பாத்திமா கனி நன்றி கூறினார்.
