×

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் வாக்காளர் தினவிழாவில் கலெக்டர் பேச்சு

மதுரை, ஜன. 26: மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை தனியார் கல்லூரியில் நடந்த விழாவில், கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து, புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி பேசினார். அப்போது, ‘தேர்தலில், அனைவரும் ஓட்டுப்போட வேண்டும். மின்னணு வாக்கு இயந்திரத்தில் பொத்தான்களை அழுத்தினால், ஒரே கட்சிக்கு ஓட்டு விழுகிறது என கூறுவதை ஏற்க முடியாது. நமது மின்னணு வாக்கு இயந்திரம் பலமுறை சோதனை செய்து, தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

எந்த மின்னணு வாக்கு இயந்திரம் எந்த வாக்குச்சாவடிக்கு செல்கிறது. எந்த வாக்குச்சாவடியில் அலுவலர் பணியாற்ற உள்ளார் என்பது கடைசி வரை தெரியாது. இதன் விபரம் அனைத்தும்  கணினி மூலம் பதிவு செய்து, தேர்வு செய்யப்படுகிறது. நமது மின்னணு வாக்கு இயந்திரத்தை 14 நாடுகள் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றன. இது குறித்து விமர்சனம் செய்யக்கூடாது. எனவே வரும் தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, ஆர்டிஓக்கள் முருகானந்தம், ரமேஷ், ராஜ்குமார், சவுந்தர்யா உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.  

Tags : election ,Voter Day ,
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...