×

மதுரையில் எய்ம்ஸ் அமையாவிடில் பொது வாழ்விலிருந்து விலக தயார் அமைச்சர் உதயகுமார் பரபரப்பு பேச்சு

திருமங்கலம், ஜன. 26: மதுரையில் எய்ம்ஸ் அமையாவிடில் பொது வாழ்விலிருந்து விலக தயார் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள செக்கானூரணியில், புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், மொழிபோர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நேற்று  நடைபெற்றது. இதில், அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசுகையில், ‘தாய்மொழிக்காக உயிரைக் கொடுத்தவர்கள் தமிழர்கள். ஆண்டுதோறும் மொழிப்போர் தியாகிகளுக்காக வீரவணக்க நாளை கடைப்பிடித்து வருகிறோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருமா? வராதா? என்ற ஐயத்தை சிலர் எழுப்புகின்றனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் மதுரையில் அமைக்கப்படும். இல்லாவிடில் பொதுவாழ்விலிருந்து விலக தயாராக இருக்கிறேன். செக்கானூரணிக்கு அருகே, கரடிக்கல்லை அடுத்த உச்சப்பட்டி-தோப்பூரில் 260 ஏக்கரில் ரூ.1,200 கோடியில் எய்ம்ஸ் அமைக்க, முதற்கட்டமாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ஜப்பான் நிறுவனத்துடன் அமைக்கப்படவிருந்த ஒப்பந்தம் கொரோனவால் காலதாமதமாகியது. காலதாமதம் ஆகலாம் ஒழிய எய்ம்ஸ் கட்டாயம் அமையும்’ என பேசினார். இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், சரவணன், நீதிபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Udayakumar ,AIIMS ,Madurai ,
× RELATED மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் வழக்கு:...