×

ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்பட 3 பேர் மீது புகார்

திண்டுக்கல், ஜன. 26: ஏலச்சீட்டு நடத்திய மோசடி செய்ததாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்பட 3 பேர் மீது புகார் மனு அளித்தனர். திண்டுக்கல் அருகே வக்கம்பட்டியை சேர்ந்தவர் மோசஸ். அரசு பள்ளி ஆசிரியர். மோசஸ், தன்னுடன் பணிபுரியும் ஆசிரியை வளர்மதி, தனது தம்பி ஆகியோருடன் சேர்ந்து கடந்த 1995ம் ஆண்டு முதல் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவர்களிடம் வக்கம்பட்டியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ரூ.1 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை ஏலச்சீட்டு போட்டனர்.

கடந்த ஒரு ஆண்டாக மோசஸ், வளர்மதி, தர்மர் ஏலச்சீட்டு போட்டவர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை திரும்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தாக தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ‘மோசஸ் உள்பட 3 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்’ என்றனர்.

Tags : persons ,government school teachers ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது