×

டிரான்ஸ்பார்மரில் கருகிய நிலையில் சடலமாக தொங்கிய வட மாநில வாலிபர்

அவிநாசி, ஜன.26: அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையத்தில் மின்சார டிரான்ஸ்பார்மரில் மது போதையில் ஏறிய வடமாநில வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது சடலத்தை மீட்டு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவிநாசி- திருப்பூர் சாலையில் உள்ள அவிநாசிலிங்கம்பாளையம் தனியார் ஓட்டலின் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதில் நேற்று சுமார் 30 வயதான வாலிபர் ஒருவர் கருகிய நிலையில்  உயிரிழந்து கிடப்பதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ஆம்புலன்சு டிரைவர் ஆகியோர்  டிரான்ஸ்பார்மர் மீது ஏறி சடலத்தை மீட்டனர்.

போலீசார் விசாரணையில் மின்சாரம் தாக்கி இறந்தவர் ஜார்கண்ட் மாநிலம் தனியா பாத் என்ற பகுதியில் இருந்து வந்து தற்போது சூலூர் பகுதியில் உள்ள  ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த கனிஷ்கர் மகன் லட்சுமணன்சிங் (28) என்பது தெரியவந்தது. அதே பகுதியில் குடியிருந்து கொண்டு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். ேபாதைக்கு அடிமையான அவரை உறவினர்கள் அனைவரும் சேர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். போதையில் இருந்த லட்சுமணன்சிங் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நின்ற பஸ்சில் இருந்து இறங்கி ஓடிவிட்டார். மீண்டும் மது அருந்திய இவர், அளவுக்கு அதிகமான போதையின் காரணமாக, டிரான்ஸ்பார்மரில் ஏறி உள்ளார். இதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Northern State ,
× RELATED திருப்பூரில் பல லட்சம் ரூபாய்...