×

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமிபூஜை

உடுமலை,ஜன.26: மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் பாப்பன்குளம் ஊராட்சிக்குட்பட்ட சாலரப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமிபூஜை நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மடத்துக்குளம் எம்எல்ஏவுமான ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் காவ்யா ஐயப்பன், துணைத்தலைவர்  கே.ஈஸ்வரசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சாமிதுரை, தீபிகா முருகானந்தம், நதீரா, கண்ணாடி பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், துணை அமைப்பாளர் வக்கீல் செந்தில்குமார், பாப்பான்குளம் ஊராட்சி மன்ற தலைவர் நாச்சம்மாள் ராமலிங்கம், துணைத்தலைவர் பாலு, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கே.எம்.முபாரக்அலி, சார்பு அணியின் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள்  இரா.சிவக்குமார், கே.ஐயப்பன், பி.தங்கவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags : reservoir ,
× RELATED திருத்தங்கல் நகராட்சியில் கட்டிட...